9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

கள்ளிமந்தையம் அருகே தம்பியை திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2023-03-26 19:00 GMT

திண்டுக்கல் மாவட்டம் கே.கீரனூரை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி சிவப்பிரியா. இந்த தம்பதிக்கு யோகேஷ் (வயது 14), கவியரசன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் யோகேஷ், நீலாகன்னிவலசு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். ேநற்று முன்தினம் யோகேசுக்கும், அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அண்ணனை, கவியரசன் விளையாட்டாக திட்டியதாக தெரிகிறது. அவர்களை பெற்றோர் சமரசம் செய்தனர்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து யோகேஷ் குடித்தான். இதில் மயங்கி விழுந்த அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கே.கீரனூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விளையாட்டாக நடந்த சண்டையில் மனமுடைந்து, பள்ளி மாணவன் தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்