அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9,699 காளைகள், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 9 ஆயிரத்து 699 காளைகள் மற்றும் 5 ஆயிரத்து 399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-01-12 20:21 GMT


அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 9 ஆயிரத்து 699 காளைகள் மற்றும் 5 ஆயிரத்து 399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்தாண்டு 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதன்பின் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் அரசின் கொரோனா விதிகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

அதன்படி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு வாடிவாசல்கள் அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர தடுப்பு வேலிகள் அமைப்பது, காளைகளுக்கான இடங்கள் ஒதுக்குவது, பார்வையாளர்கள் மாடம் அமைப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதில் முதலில் 15-ந் தேதி அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகள் முடியும் தருவாயில் உள்ளன.

டோக்கன் பதிவிறக்கம்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஜல்லிக்கட்டிற்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவு கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. அதில் பங்கேற்க 9 ஆயிரத்து 699 காளைகள் மற்றும் 5 ஆயிரத்து 399 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே அனுமதி டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்