960 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

960 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-12-19 21:47 GMT

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை அக்ரஹாரம் தெருவில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு லோடு வேனில் 960 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த சுடலை என்பவர் லோடுவேனை நிறுத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுடலை மீது வழக்குப்பதிவு செய்து லோடு வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்