விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்

கோத்தகிரியில் 2 நாட்களில் விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-12-24 18:45 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் நேற்று கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கியது, உரிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியது என விதிகளை மீறியதாக ரூ.34 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் நேற்று முன்தினம் அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு ரூ.30 ஆயிரம் அபராதம் உள்பட வாகனங்களில் ஆட்களை அழைத்து சென்ற வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.55 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.89 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்