கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் முதற்கட்ட சிறப்பு முகாம்களில் 88 சதவீதம் பதிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் முதற்கட்ட சிறப்பு முகாம்களில் 88 சதவீதம் பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-08-06 18:30 GMT

மகளிர் உரிமை தொகை திட்டம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்கான குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று முடிந்தது.

அதனை தொடர்ந்து மாவட்டத்தில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நேற்று முன்தினம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

88 சதவீதம் பதிவு

ஏற்கனவே நடந்த முதற்கட்ட சிறப்பு முகாம்களில் 74,311 விண்ணப்பங்களும், முதற்கட்ட முகாம்களில் விடுபட்டவர்களுக்காக நடைபெற்ற முகாமில் 2,189 விண்ணப்பங்களும் என மொத்தம் 76,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக நடந்த முகாம்களில் 95 சதவீத விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவிகளிடம் வழங்கப்பட்டு, அவற்றில் 88 சதவீத விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்