பிளஸ்-1 பொதுத்தேர்வில் 83.58 சதவீதம் பேர் தேர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 83.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 678 மாணவர்கள், 14 ஆயிரத்து 859 மாணவிகள் என ெமாத்தம் 29 ஆயிரத்து 537 பேர் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுதினர். இதில் 11 ஆயிரத்து 172 மாணவர்களும், 13 ஆயிரத்து 515 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 687 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 83.58 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-1 வகுப்பு தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 37-வது இடத்தை பிடித்துள்ளது.