எடப்பாடி அருகே 81 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-3 பேர் கைது

எடப்பாடி அருகே 81 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-16 22:07 GMT

எடப்பாடி:

புகையிலை பொருட்கள்

எடப்பாடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது எடப்பாடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் உள்ள குலாலர் தெருவில் சிவா (வயது 41) என்பவருக்கு சொந்தமான வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டாராம் மகன் ஷேத்தாராம் (36) என்பவர் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

3 பேர் கைது

மேலும் ஷேத்தாரம், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும், அவருக்கு உடந்தையாக எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (26), இரும்பாலை அருகே கே.ஆர். தோப்பூர் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (29) ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 81 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இவர்களுக்கு எங்கிருந்து குட்கா பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்