போலீசாரால் மீட்கப்பட்ட 80 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

போலீசாரால் மீட்கப்பட்ட 80 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-08-06 21:04 GMT


மதுரை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள், சைபர் கிரைம் போலீசார் மூலம் அவ்வப்போது மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் ரூ.13 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 80 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் முன்னிலையில், அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதுகுறித்து, போலீஸ் சூப்பிரண்டு மேலும் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.1 கோடியே 58 லட்சத்து 42 ஆயிரத்து 400 மதிப்புள்ள 1107 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் நடந்த சைபர் கிரைம் குற்ற வழக்குகளில் இதுவரை ரூ.44 லட்சத்து 28 ஆயிரத்து 805 உரியவர்களுக்கு அவருடைய வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு வழங்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 2 மாதத்தில் மட்டும் ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 406 மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்