ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 78.6 மில்லி மீட்டர் மழை பதிவு
ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 78.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்தநிலையில் திருப்பத்தூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகள், பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆம்பூர் சர்க்கரை ஆலை-78.6, ஆம்பூர்-52, திருப்பத்தூர்-38.6, நாட்டறம்பள்ளி-35, வாணியம்பாடி-16, ஆலங்காயம்-11.