திருச்சியில் திருமணத்திற்கு 3 நாட்கள் முன்பு மணப்பெண்ணுக்காக வாங்கப்பட்ட 70 பவுன் நகை கொள்ளை
கொள்ளையர்கள் இருவர் வீட்டை நோட்டமிட்டு வீட்டின் சுவர் ஏறிக்குதிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருச்சி,
திருச்சி கருமண்டபம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியர் நாகலெட்சுமி. இவரது தங்கை மகளுக்கு வருகின்ற புதன்கிழமை திருமணம் நடைபெற உள்ளதையொட்டி, மணப்பெண்ணுக்காக 70 பவுன் நகையை வாங்க்கி தனது வீட்டில் வைத்துள்ளார்.
இந்த நிலையில் பட்டப்பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் கதவை உடைத்துள்ள உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகையையும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததோடு, கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொள்ளையர்கள் இருவர் வீட்டை நோட்டமிட்டு வீட்டின் சுவர் ஏறிக்குதிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.