தமிழகத்தின் 7 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
தமிழகத்தின் 7 இடங்களில் இன்று நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அத்துடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலும் கொளுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 7 இடங்களில் இன்று நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பம் பதிவான இடங்கள்;
* கரூர் பரமத்தி - 103 டிகிரி பாரன்ஹீட்
* மதுரை விமான நிலையம் - 103 டிகிரி பாரன்ஹீட்
* வேலூர் - 103 டிகிரி பாரன்ஹீட்
* பாளையங்கோட்டை - 102 டிகிரி பாரன்ஹீட்
* மதுரை நகரம் - 102 டிகிரி பாரன்ஹீட்
* ஈரோடு - 101 டிகிரி பாரன்ஹீட்
* திருச்சி - 101 டிகிரி பாரன்ஹீட்