ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகள்

சேரன்மாதேவியில் ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்

Update: 2023-02-16 22:04 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி யூனியனுக்கு உட்பட்ட மூலச்சி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில், 71 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 36 ஆயிரத்து 945 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். இம்முகாமில் பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை அவர் பார்வையிட்டார்.

பின்னர், அவர் கூறும்போது, மக்கள் நம்மை தேடி வரக்கூடாது. அதிகாரிகள் மக்களை தேடி சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தாமிரபரணி நதியினை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகமும் இணைந்து தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும், என்றார்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், சேரன்மாதேவி உதவி கலெகட்ர் முகமது சபீர் ஆலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமாரதாஸ், வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அனிதா, சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசெல்வி,

சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை சீவலமுத்துகுமார், மூலச்சி ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரகனி குருநாதன், அம்பை தாசில்தார் ஜெயசங்கர், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்