லாரிகளில் மணல் கடத்திய 7 பேர் கைது

லாரிகளில் மணல் கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-19 19:37 GMT

திசையன்விளை:

உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை இடையன்குடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 6 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். இதில் ஜல்லிகற்கள் மற்றும் எம் சாண்டு மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரசு அனுமதி இன்றி ராதாபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து கடற்கரை வழியாக தூத்துக்குடிக்கு கொண்டு செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக திசையன்விளை துணை தாசில்தார் ரமேஷ், உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டிவந்த ஆனைகுடி பெருமாள்புரத்தை சேர்ந்த சிவா (வயது 29), இடையன்குடி கீழத்தெரு ராஜன் (52), ரோச் மாநகர் தெற்கு தெரு அமர்செல்வன் (41), சங்கனாபுரம் வேதநாயகம் (51), நடுவக்குறிச்சி செல்வக்குமார் (32), தட்டார்மடம் ராஜி (46) மற்றும் செட்டிவிளை வடக்குதெரு ஜேசுராஜன் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணலுடன் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்