ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 60 பேர் கைது
பா.ஜ.க.வினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகரில் கிழக்கு மாவட்ட பா. ஜனதா ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் சார்பில் சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் விருதுநகர் தேசபந்துதிடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் சுப்பராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி இல்லாத நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 4 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.