'உலகில் 6 புலி இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன'

உலகில் 6 புலி இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன என்று ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-07-29 19:30 GMT

ஊட்டி

உலகில் 6 புலி இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன என்று ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு தேசிய பசுமை படை சார்பில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கி, நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகத்தின் அறிமுக புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், புலிகள் தங்கள் வாழ்நாளில் வனப்பகுதியின் பல்லுயிர் தன்மையை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவத்தை அளிக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகம் உலகின் சிறந்ததாக தொடர்வதற்கு உணவு சங்கிலியின் முதல் நிலையில் இருக்கும் புலிகள்தான் காரணம் என்றார்.

ஆய்வு கட்டுரைகள்

தேசிய பசுமை படையின் குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், உலகில் காணப்பட்ட 9 வகையான புலிகளில் 3 வகையான புலிகள் அழிந்து விட்டன. மீதம் இருக்கக்கூடிய 6 வகையான புலி இனங்களும் அழியும் தருவாயில் உள்ளது. மக்கள் தொகை பெருக்கம், அன்னிய தாவரங்கள், வேட்டையாடுதல் போன்ற காரணங்கள் புலிகள் பாதுகாப்பில் முக்கிய சவாலாக உள்ளது. புலிகள் குறித்த ஆய்வு கட்டுரைகள் மாணவர்கள் எழுதுவது அவசியம். இயற்கையை பாதுகாப்பதை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்றார்.

இதில் ஆசிரியர் ஜெயசித்ரா மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை குன்னூர் கல்வி மாவட்ட பசுமை படை செய்திருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்