விபத்தில் 6 பேர் படுகாயம்
ராஜபாளையம் அருகே விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீீவில்லிபுத்தூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சிவகிரியில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளி ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்பொழுது அரசு பஸ்சை ஆம்புலன்ஸ் முந்தி செல்ல முயன்றது. இந்தநிலையில் எதிரே ஜே.சி.பி. வாகனம் வருவதை கவனிக்காமல் அதன் மேல் மோதாமல் இருப்பதற்காக ஆம்புலன்சை டிரைவர் திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர், ஆம்புலன்சில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையிலும், ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.