ஆரணி பகுதியில் சாராயம் விற்ற 6 பேர் கைது

ஆரணி பகுதியில் சாராயம் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-04 10:29 GMT

ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் ஆகியோர் தலைமையில் ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் பி.புகழ், களம்பூர் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கலையரசி, புனிதா மற்றும் போலீசார் எஸ்.யு.வனம் மலைப்பகுதி, வெட்டியாந்தொழுவம் காட்டுப்பகுதி மற்றும் ஏரி பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்றதாக 6 பேரை பிடித்து, அவர்களிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், ராணிப்பேட்டை மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 47), கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (50), வண்ணாங்குளம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (52), சந்தவாசலை அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்த சேஷா அம்மாள் (59), சிறுமூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (58), எஸ்.யு.வனம் பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு (43) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்