மதுபாட்டில்கள் வைத்திருந்த 6 பேர் கைது

மதுபாட்டில்கள் வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-25 01:09 GMT

பேரையூர், 

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, வில்லூர், பேரையூர், போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது வில்லூரை சேர்ந்த முத்துக்கருப்பன் (வயது 53), காளப்பன்பட்டியை சேர்ந்த மொக்கதுரை (49), விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரத்தை சேர்ந்த பழனி (20), அல்லி குண்டத்தை சேர்ந்த ராஜாராம் (38), அரசபட்டியை சேர்ந்த சேதுராமன் (62), சந்தையூரை சேர்ந்த சங்கரநாராயணன் (66) ஆகியோர் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது ரோந்து சென்ற போலீசார் அவர்களிடமிருந்து 56 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்