அரியலூரில் மேலும் 6 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் நேற்று குணமாகியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மொத்தம் 42 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.