அச்சகத்தில் ரூ.6¼ லட்சம் மோசடி; ஊழியர் கைது
கடலூர் அச்சகத்தில் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஜி-பே மூலம் வாங்கி...
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் மேகநாதன் மகன் செந்தில்நாதன்(வயது 44). இவர் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் செந்தில் பேப்பர் ஸ்டோர் நடத்தி வருகிறாா். மேலும் இதில் ஒரு பிரிவில் அச்சகமும் நடத்தி வருகிறார்.
இவரது கடையில் வேலை செய்து வரும் புதுப்பாளையம் சிக்கந்தர் தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் ராமச்சந்திரன்(41) என்பவர் திருமண அழைப்பிதழ் அச்சிடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் பில் கொடுத்து மொத்த தொகையையும் தனது செல்போன் எண்ணுக்கு ஜி-பே மூலம் வாங்கி வந்துள்ளார்.
கைது
இதுபற்றி அறிந்த செந்தில்நாதன், விசாரணை நடத்தியதில் 2021-ம் ஆண்டு முதல் ராமச்சந்திரன் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்நாதன், கடலூர் புதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.