வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க, திருத்த 6 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை பதிவு செய்யவும், திருத்தங்கள், ஆட்சேபனைகள், முகவரி மாற்றங்களை மேற்கொள்ளவும் வாக்காளர்களுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-06 20:56 GMT

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை பதிவு செய்யவும், திருத்தங்கள், ஆட்சேபனைகள், முகவரி மாற்றங்களை மேற்கொள்ளவும் வாக்காளர்களுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.

அந்தவகையில் கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக 4.07 லட்சம் விண்ணப்பங்களும், முகவரி மாற்றங்களுக்காக 1.55 லட்சம் விண்ணப்பங்களும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அவை உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 6 லட்சத்து 112 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்த முகாம்களில் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்று விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களும் அந்தப் பகுதிக்குச் சென்று பணிகளை பார்வையிட்டுள்ளனர் என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்