6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கண்டாச்சிபுரத்தில் 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் பெட்டிக்கடைக்காரர் கைது
திருக்கோவிலூர்
ரகசிய தகவலின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள பெட்டிக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடை உரிமையாளர் பன்னீர்செல்வம்(வயது 40) என்பவரை கைது செய்த போலீசாா் அவரிடம் இருந்த 6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை சப்ளை செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.