நீலாங்கரை ஆழ்கடல் பகுதியில் உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள்30 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு

மீன்பிடிக்க சென்ற போது படகு என்ஜின் பழுதானதால் ஆழ்கடல் பகுதியில் உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள் 30 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.

Update: 2023-08-02 08:03 GMT

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தை சேர்ந்த மீனவர்களான கோவிந்த் (வயது 55), பவுன்ராஜ் (34), பாலசுப்பிரமணி (47), சிலம்பரசன் (34), இளங்கோ (38), வீரவேல் (35) ஆகிய 6 பேரும் கடந்த 30-ந் தேதி 2 மணி அளவில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று புதுப்பட்டினம் கடலில் ஆழ்கடலில் மீன்பிடித்தனர். மீ்ண்டும் கரைக்கு திரும்ப மோட்டார் என்ஜினை இயக்கியபோது பழுது ஏற்பட்டு நின்றது.

கரைப்பகுதியில் உள்ள சக மீனவர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்க முயன்றபோது, செல்போன் சிக்னலும் இயங்காததால் நொந்து போய் உணவின்றி மயக்க நிலைக்கு சென்றுவிட்டனர்.

இதற்கிடையில் நேற்று அதிகாலை கரை திரும்புவதாக இருந்த மீனவர்கள் கரை திரும்பாததால் சந்தேகமடைந்த 6 மீனவர்களின் உறவினர்களும், கடலோர காவல் படைக்கும், மீன்வளத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.பிறகு போலீசாருடன் இணைந்து, கடலோர காவல் படையினர் குறிப்பிட்ட தூரத்தில் கரைப்பகுதியில் 6 மீனவர்களையும் தேடி வந்தனர். பிறகு புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், சதுரங்கப்பட்டினம் ஆகிய 3 கிராம மீனவர்கள் 5 படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று தேடியபோது, 6 மீனவர்களும் உணவின்றி என்ஜின் பழுதடைந்த படகில் மயக்க நிலையில் நீலாங்கரை கடல்பகுதிகளில் இருந்ததை கண்டுபிடித்து அவர்களை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்