தமிழ்நாட்டில் 5-வது நாளாக சுட்டெரிக்கும் வெப்பம்: 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது - அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி

தமிழ்நாட்டில் தொடர்ந்து 5-வது நாளாக வெப்பம் சுட்டெரிக்கிறது. நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து இருந்தது. அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது.

Update: 2023-05-18 00:41 GMT

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் உக்கிரமாகி வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 19 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

அதிலும் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவானது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

5-வது நாளாக நேற்றும் சில இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. 13 இடங்களில் 100 டிகிரியை வெயில் அளவு கடந்து இருந்த நிலையில், அதிகபட்சமாக வேலூரில் 106.88 டிகிரி பதிவானது.

ஊட்டி, தூத்துக்குடி, சென்னை நுங்கம்பாக்கத்தை தவிர மற்ற இடங்களில் இயல்பான அளவைவிட 1 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதிகமாக கரூரில் 5.2 டிகிரி வெயில் இயல்பை காட்டிலும் அதிகமாக கொளுத்தியது.

இந்த நிலையில் இன்றும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வெயில் பதிவான இடங்கள்

தமிழ்நாட்டில் நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவான வெயில் அளவு வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 98.78 டிகிரி(37.1 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 102.92 டிகிரி(39.4 செல்சியஸ்)

கோவை - 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்)

கடலூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

தர்மபுரி - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)

ஈரோடு - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

கன்னியாகுமரி - 94.64 டிகிரி (34.8 செல்சியஸ்)

கரூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

கொடைக்கானல் - 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்)

மதுரை நகரம் - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்)

மதுரை விமான நிலையம்-104 டிகிரி(40 செல்சியஸ்)

நாகை - 99.14 டிகிரி (37.3 செல்சியஸ்)

நாமக்கல் - 98.6 டிகிரி (37.7 செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

பரங்கிப்பேட்டை - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)

சேலம் - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)

தஞ்சை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

திருப்பத்தூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

திருச்சி - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்)

திருத்தணி - 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)

தூத்துக்குடி - 93.2 டிகிரி (34 செல்சியஸ்)

ஊட்டி - 69.26 டிகிரி (20.7 செல்சியஸ்)

வால்பாறை - 83.3 டிகிரி (28.5 செல்சியஸ்)

வேலூர் - 106.88 டிகிரி (41.6 செல்சியஸ்)

Tags:    

மேலும் செய்திகள்