சாராயம்-மது விற்பனை; ஒரே நாளில் 56 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் சாராயம்-மது விற்பனை செய்ததாக ஒரே நாளில் 56 பேர் கைது செய்யப்பட்டனர். 2,100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-17 19:15 GMT

திருவாரூர் மாவட்டத்தில் சாராயம்-மது விற்பனை செய்ததாக ஒரே நாளில் 56 பேர் கைது செய்யப்பட்டனர். 2,100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

சாராயம் விற்பனை

விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக டி.ஜி.பி. உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் போலீசார் சாராயம் விற்பனை செய்பவர்கள் மற்றும் வெளி மாநில மது பாட்டில்களை விற்பனை செய்பவர்களை தீவிரமாக கைது செய்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சாராயத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

56 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு பகுதிகளில் சாராயம் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் என நேற்று ஒரே நாளில் மட்டும் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களில் திருவாரூர் மாவட்டத்தில் 130 பேர் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் நேற்று சாராய வழக்கில் கைதானவர்களிடமிருந்து 2,100 லிட்டர் சாராயம் மற்றும் 130 வெளிமாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 3 நாட்களில் 3,000 லிட்டர் சாராயம் மற்றும் 260 வெளி மாநில மது பாட்டில்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்ட விரோதமாக சாராய விற்பனை மற்றும் வெளி மாநில மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எரிசாராயம் விற்ற 5 பேர் கைது

முத்துப்பேட்டை பகுதியில் சிலர் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப-்இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது தம்பிக்கோட்டை பகுதியில் முருகேசன் (வயது40), மங்கலூர் பகுதியில் பொதுவுடைமூர்த்தி (45), தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் செந்தில் குமார் (44), ஜாம்புவானோடை பகுதியில் ஜெய்சங்கர் (48), நாச்சிக்குளம் பகுதியில் வினோத்குமார் (32) ஆகியோர் எரிசாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து, 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்