பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 546 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 546 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-10-17 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல், கடனுதவி, ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 515 மனுக்கள், .மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 31 மனுக்கள் என மொத்தம் 546 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இந்த கூட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு கல்வராயன்மலை எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்தார். இவரது மனைவி பிரியாவுக்கு மேல் வாழப்பாடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் சமையலர் பணிக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்