வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 525 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்-கல்வி மண்டல இணை இயக்குனர் வழங்கினார்

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 525 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் கல்வி மண்டல இணை இயக்குனர் வழங்கினார்.

Update: 2023-09-27 19:00 GMT


வால்பாறை


வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார் .கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 525 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கல்லூரி பருவத்தில் மாணவ மாணவிகளுக்கு காதல் வேண்டாம். படித்து முடித்து சொந்த காலில் நின்று சம்பாதிக்கும் சமயத்தில் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் தகுதியை இந்த சமயத்தில் தீர்மானிப்பது உங்கள் கல்வி மட்டுமே. அதிகளவிலான புத்தகங்களை படியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்