சூறாவளி காற்றுக்கு 50 ஆயிரம் வாழைகள் நாசம்

சூறாவளி காற்றுக்கு 50 ஆயிரம் வாழைகள் நாசம்

Update: 2023-04-23 18:45 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதில் ஜல்லிப்பட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், தாளக்கரை, கரையாம்பாளையம், செஞ்சேரி, கள்ளப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 50 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்து நாசம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த மழைக்கு ஒருசில இடங்களில் தென்னை மரங்களும் சரிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்