வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் உழவு பணி மேற்கொள்ளும் சிறுவிவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

வேளாண் பொறியியல் துறையில், வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவுப்பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்ததொகையில் 50 சதவீதம் உழவு மானியமாக வழங்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-20 09:14 GMT

மானியம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் பொறியியல் துறையில் வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவு பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்ததொகையில் 50 சதவீதம் தொகை உழவு மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ.250 என்ற அடிப்படையில் ஒரு விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ.625 ம் புன்செய் உழவுக்கு ரூ.1250 ம் அதிக பட்ச மானியமாக வழங்கப்படும்.

இ- வாடகை செயலியில்

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ- வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று. நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: செயற்பொறியாளர், 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. செல்போன் எண் 99529 52253.

உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சீபுரம் 631 502. அலைபேசி எண்: 044- 24352356, செல்போன் எண்: 90030 90440.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்