மூலனூர்,
மூலனூரை அடுத்துள்ள கன்னிவாடி பேரூராட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்து 30 ஆயிரத்தில்கரூர்-தாராபுரம் மெயின் சாலை முதல் எடைக்கல்பாடி சாலை வரையுள்ள தார்சாலை அமைக்கும் பணி, ஒரத்துப்பாளையத்தில் ரூ.8 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணி, சின்னமருதூர் ஊராட்சி கிழக்கு வலசு பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணி என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் கோட்டைமருதூர் ஊராட்சி, பிச்சைக்கல்பட்டி கிராமத்தில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளியில் சமையல் கூடத்தை திறந்து வைத்தார்.
-