தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

நெல்லிக்குப்பத்தில் தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

Update: 2022-06-23 18:30 GMT

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் கீழ்பாதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி(வயது 50). கூலி தொழிலாளி. இவர் கடந்த 13-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி செல்வியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்ததுடன், பொருட்களும் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 5 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தட்சணாமூர்த்தி வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்