5 பேர் காயம்

நெல்லை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து; 5 பேர் காயம்;

Update:2022-08-03 02:54 IST

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு பஸ்சில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ராமேசுவரம் சென்றுவிட்டு நேற்று அதிகாலை கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். நெல்லை- கன்னியாகுமரி நான்குவழி சாலையில் நெல்லை அருகே பொன்னாக்குடி விலக்கு பகுதியில் சென்றபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பஸ் கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் காயம் அடைந்த உமேஷ் (வயது 45), சுதீப் (43) உள்ளிட்ட 5 பேரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சாலையில் இருந்து பஸ் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்