சாராயம் விற்ற 5 பேர் கைது
ஒடுகத்தூர் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒடுகத்தூர் மலைப்பகுதிகளில் வேலூர் காலால் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் மூன்று குழுக்களாக பிரித்து சாராய வேட்டை நடத்தினர். அப்போது சின்னப்பள்ளிக்குப்பம் மலை அடிவாரத்தில் சாராய் விற்பனை செய்த தொங்கும் மலையைச் சேர்ந்த விஜயன் (வயது 37) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 250 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று சாராயம் விற்றதாக எலந்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (33), கே.ஜி. ஏரியூரை சேர்ந்த தேவராஜ் (25), சின்ன புதூர்பகுதியில் காமராஜ் (44), சேர்பாடி ஆற்றங்கரையோரம் பெரியசாமி ஆகியோரும்கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து 1,250 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 1,000 லிட்டர் ஊறலை போலீசார் தீ வைத்து கொளுத்தினர்.