இரும்பு கம்பியை திருடிய 5 பேர் கைது

பாபநாசத்தில் கடையின் பூட்டை உடைத்து இரும்பு கம்பியை திருடிய 5 ேபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-27 20:36 GMT

பாபநாசத்தில் கடையின் பூட்டை உடைத்து இரும்பு கம்பியை திருடிய 5 ேபரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு கடை

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் முகமது நசீர் (வயது25). இவர் திருப்பாலைத்துறையில் தஞ்சாவூர் - கும்பகோணம் மெயின் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 20.11.2022-ந்தேதி கடையின் பூட்டை உடைத்து 5 மர்மநபர்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை லாரியில் திருடி சென்று விட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது நசீர் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மேற்பார்வையில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், முத்துக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் இரும்பு கம்பிகளை திருடியவர்களை தேடி வந்தனர்.

5 பேர் கைது

அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அய்யம்பேட்டை மணல்மேடு தெருவை சேர்ந்த பிரபாகரன் (33), பசுபதி கோவில் காமராஜபுரம் முதல் தெருவை சேர்ந்த மணிகண்டன் ( 28), காட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜமணிகண்டபூபதி (24), திருக்காட்டுப்பள்ளி காமராஜர் காலனியை சேர்ந்த ஜேபி ( 36), திருச்சோற்றுத்துறை குடியானத்தெருவை சேர்ந்த நெருப்புக்குச்சி என்கின்ற மணிகண்டன் (38) ஆகியோர் என்பதும், அவர்கள் முகமதுநசீர் கடையில் இரும்பு கம்பிகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இரும்புகம்பிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்