லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது

திருவண்ணாமலையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-07 16:48 GMT

திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் அண்ணாசாலை, தண்டராம்பட்டு ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் திருவண்ணாமலை திருநாவுக்கரசு தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 29), கல்நகரை சேர்ந்த சதீஷ் (37), அண்ணாநகரை சேர்ந்த அய்யப்பன் (40), எள்ளுகுட்டை தெருவை சேர்ந்த சுலைமான் (58), கல்குதிரை தர்கா தெருவை சேர்ந்த அஸ்கர் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்