கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள்: 'மகிழ்ச்சி' தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாக திகழ்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-03-15 16:49 GMT

சென்னை,

மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜுலை மாதம் திறந்து வைத்தார். சுமார் 5.5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த நூலகத்தில் முதல் கட்டமாக 3 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அண்ணா நூலகத்தை விட கலைஞர் நூலகம் கட்டிட அளவிலும், புத்தக எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், கலைஞர் நூலகத்தின் வசதிகள் நவீன காலத்திற்கு ஏற்றபடி உள்ளது. கலைஞர் நூலகம், தமிழ் நகரின் களஞ்சியம். கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள், சுமார் 2 லட்சம் பேர் நூலகத்தைப் பார்வையிடுகின்றனர்.

மதுரையில் 'கலைஞர் நூற்றாண்டு' நூலகத்திற்கு வந்து சென்றவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் கடந்து விட்டதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைத்துச் சொன்னார். மகிழ்ச்சி. தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாகத் திகழ்கிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்