கவர்னரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாததால் 5 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கவர்னரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாததால் 5 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-07-20 19:04 GMT

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசங்கர், தி.மு.க. அரசை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி களங்கப்படுத்துவதாக கூறி அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், இதுகுறித்து ஒன்றியக்குழுத் தலைவர் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் மனு கொடுத்தார். இதையடுத்து தலைவர், இதுகுறித்து மாவட்ட செயலாளரிடமும், அரசு உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இதைதொடர்ந்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாததால் அவருடன், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து உறுப்பினர்கள் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருப்பூர் செந்தில்குமரன், பொன்பேத்தி சுந்தரபாண்டியன்:- நபார்டு திட்டத்தில் நாங்கள் சொல்லும் வேலைகள் எல்லாம் மாறிவருகிறதே எப்படி மாறிவருகிறது.

ஒக்கூர் அல்லி முத்து:- ஒக்கூரில் செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். செல்போன் சிக்னல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

மீமிசல் ரமேஷ்:- ஆலத்தூர் கிராமத்தில் ஒரு அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும். தீயூர் உதயகுமார்:- குடிநீருக்காக அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறு பணிகள் வேலையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்