சாத்தனூர் அணைக்கு 460 கனஅடி நீர் வரத்து

கிருஷ்ணகிரி அணை நிரம்பியதை தொடர்ந்து அதிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் சாத்தனூர் அணைக்கு 426 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Update: 2023-06-18 14:34 GMT

தண்டராம்பட்டு

கிருஷ்ணகிரி அணை நிரம்பியதை தொடர்ந்து அதிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் சாத்தனூர் அணைக்கு 426 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சாத்தனூர் அணை

தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை, 119 உயரம் கொண்ட தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக விளங்குகிறது. இதில் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.இந்த அணையில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

பல்வேறு கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டமும் அணை நீரைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.தற்போது அணையில் 103.95 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணையாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்ததன் எதிரொலியாக கிருஷ்ணகிரி அணை நிரம்பியது.அந்த அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

கிடுகிடுவென உயர வாய்ப்பு

அவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீரால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 460 கன அடி நீர் வருகிறது. கிருஷ்ணகிரி அணை நிரம்பி நிலையில் தென்மேற்கு பருவமழை சில நாட்களில் தீவிரம் அடைய உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படலாம் என்பதால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்