பெரம்பலூரில் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டி தேர்வினை 444 பேர் எழுதினர்

பெரம்பலூரில், மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டி தேர்வினை 444 பேர் எழுதினர். 654 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2023-09-24 19:46 GMT

திறன் மேம்பாட்டு போட்டி தேர்வு

பிரான்சில் உள்ள லியான் நகரில் 47-வது சர்வதேச அளவிலான திறன் போட்டிகள் இந்த மாதம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்குபெற தகுதி வாய்ந்த போட்டியாளர்களை தேர்வு செய்யும் விதமாக, மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டி தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டி தேர்வு நிலை-1 நேற்று நடந்தது.

இந்த தேர்வை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என மொத்தம் 1,098 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடந்தது.

654 பேர் தேர்வு எழுதவில்லை

தொழில் துறைகளில், தொழிற்பிரிவுகளில் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக தேர்வு நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணி வரை என மொத்தம் ஒரு மணி நேரம் நடந்தது. 100 மதிப்பெண்ணுக்கு 40 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. ஓ.எம்.ஆர். விடைத்தாளில் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வினை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வினை 444 பேர் எழுதினர், 654 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வந்தவர்களை விட தேர்வு எழுத வராதவர்களை அதிகம். அதில் ஒரு தேர்வு அறையில் யாருமே தோ்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்