423 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சேலத்தில் நடைபெற்ற விழாவில் 423 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

Update: 2023-10-16 20:03 GMT

சேலத்தில் நடைபெற்ற விழாவில் 423 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

நலத்திட்ட உதவி

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஹர் சகாய் மீனா முன்னிலை வகித்தார்.

விழாவில் மாற்றத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடைய சிறப்பு செல்போன், மோட்டார் பொருத்திய எந்திரம், காதொலி கருவி, மடக்கு சக்கர நாற்காலி, 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. மொத்தம் 423 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 79 ஆயிரத்து 666 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

கல்விக்கடன் உதவி

சேலத்தில் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் மூலம் கல்விக்கடன் மேளா நடத்தப்பட்டது. இதில் கல்விக்கடன் கேட்டு 102 மாணவ, மாணவிகள் கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு நேற்று அவர்களுக்கு ரூ.6 கோடியே 21 லட்சம் கல்விக்கடன் உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாற்றுத்திறனாளி நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்