41-வது ஆண்டு நினைவுநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவிப்பு
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.;
சென்னை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி.நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, மாநில கல்லூரி பேராசிரியை சித்ரா, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், மாநில துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார், தென்சென்னை மாவட்ட முன்னாள் பொருளாளர் தி.நகர் ஸ்ரீராம், முன்னாள் கவுன்சிலர் வில்லியம்ஸ், வர்த்தகப்பிரிவு துணைத் தலைவர் சித்ராகிருஷ்ணன், மயிலை முரளிதரன், மோகன்பாபு, சைதை கார்த்திக், திலீப்குமார், சந்திரசேகர், ஆர்.டி.குமார், சூளை ராஜேந்திரன், வீரபாண்டியன், முகமது அலி, தணிகாசலம், சரவணன், சூளை ராமலிங்கம், ராஜசேகர்.
பா.ஜனதா மாநில செயலாளரும், முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன், நாச்சிக்குளம் சரவணன், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திருப்புகழ்.
தி.மு.க. மகளிர் அணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், துணை செயலாளர் வி.பி.மணி, நிர்வாகிகள் மகேந்திரன், ஆடியோ சுரேஷ், சரவணன், தளபதி பேரவை தலைவர் அருள்காந்த், தட்சணா மூர்த்தி, அறிவுமணி, பிரபு,
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, நிர்வாகிகள் முகப்பேர் இளஞ்செழியன், இஸ்மாயில் கனி, கன்னியப்பன், மாரிமுத்து, சம்பத்குமார், மகிழன்பன், நித்தியானந்தம்,
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஆர்.எம்.சரவணன், ஜோதிராம், துரைராஜ், வினோத்குமார், குமரேசன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கொள்கை விளக்க அணி செயலாளர் வந்திய தேவன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், ராஜேந்திரன், கழககுமார், சுப்பிரமணி, மகேந்திரன், குகன்செந்தில், பூங்காநகர் ராமதாஸ்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், ரவிச்சந்திரன், நந்து, ஆர்.எஸ்.முத்து, சைதை மனோகரன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், நிர்வாகிகள் செல்லத்துரை, இரா.செல்வம், பாவல், இளங்கோ.
தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி, நிர்வாகிகள் விசாகன் ராஜா, பிரபு ரமேஷ், பாஸ்கர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் அன்பு தென்னரசன், ஜெகதீச பாண்டியன், வெற்றிகுமரன், புகழேந்தி மாறன், சரவணன், அய்யனார், பாசில், செந்தில், பாக்யராசன், ஸ்ரீதர், டால்பின் ரவி, பிலால், தீபக், பார்த்தசாரதி, கார்த்திகேயன்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், செய்தி தொடர்பாளர் சந்தானம், நிர்வாகிகள் ராபர்ட், வி.பி.ஐயர், புரசை நாகராஜ், சுந்தரலிங்கம், மாரியப்பன், புரசைகுமார், உதயகுமார், பாலமுருகன், சுப்பிரமணியம், செல்வராஜ், பேச்சிராஜன், எம்.எம்.டி.ஏ. பாலமுருகன், பொன்ராஜ், மோகன், மணிராஜ், தர்மராஜ், லிங்கசாமி.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, நிர்வாகிகள் சுப்பையா, பாஸ்கர், அருண்குமார், ராஜேஷ், சங்கர பாண்டியன், சாபுதீன், சண்முகசுந்தரம்.
அண்ணா-எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக நிறுவனர் முத்துராமன் சிங்கப்பெருமாள், சுரேஷ் கண்ணன், சுகன்யா, பிரேம்குமார், புவனேஸ்வரி, மூவேந்திரன், தாமஸ்.
சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், செயற்குழு உறுப்பினர் முருககனி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், பொதுச்செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், துணைத்தலைவர் எட்டுராஜ், சென்னை வாழ் நாடார் சங்க செயலாளர் செல்லத்துரை, என்.டி.ஆர். பவுண்டேசன் அமைப்பாளர் எஸ்.வீரகுமார், தென்சென்னை மாவட்ட தலைவர் இமானுவேல், துணைத்தலைவர் ராஜன், செய்தித்தொடர்பாளர் கணேஷ்குமார்,
சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சிதம்பரம், திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்கம் சென்னை கிளை தலைவர் வி.செல்வராஜ், இயக்குனர்கள் அன்புச்செழியன், ஆறுமுக பாண்டியன், சாம், ஆனந்த் பிரத்வி, சித்ரா கிருஷ்ணன், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி,
தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் எஸ்.சுந்தரேசன், மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை மகமை தருமபண்டு தலைவர் சந்திரமோகன், பொதுச்செயலாளர் அரிகரன், நிர்வாக குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி,
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ஆர்.ராஜ்குமார், எழுத்தாளர் முனைவர் அமுதா பால கிருஷ்ணன், முருகன் தியேட்டர் பாலசுப்பிரமணியம்,
நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க நிர்வாக குழு செயலாளர் மயிலை சந்திரசேகர், நிர்வாக குழு உறுப்பினர் பூவை ராம்ராஜ், பூந்தமல்லி வட்டார ஐக்கிய நாடார் சங்க செயலாளர் ஆர்.சுரேஷ், கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் உதயகுமார் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் மேக போச்சிராஜன், அமைப்பு செயலாளர் செல்வராஜ்.
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீஷ் சவுந்தரராஜன் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், காயல் இளவரசு, கணேசா, மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் டி.எஸ்.சண்முகம், புழல் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை,
திருவொற்றியூர் நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, திருவொற்றியூர் தாய்-சேய் செயலாளர் முல்லை பிரைட்டன்,
மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க நிறுவன தலைவர் ஏ.தங்கம், தமிழர் தந்தை பார்அட்லா சி.பா.ஆதித்தனார் வக்கீல் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் எமிலிசன், செயலாளர் சுஜின்ராஜ், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சுபாஷ், அயன்புரம் கிளை நிர்வாகிகள் சதீஷ், சந்திர சேகர், அருண்பாண்டியன்,
தமிழ்நாடு வணிகர் மகாஜன சங்க துணைத் தலைவர் ஆர்.காமராஜ், ஒருங்கிணைப்பாளர் மாரிஸ்வரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் மாரிமுத்து, வடசென்னை வியாபாரி சங்க தலைவர் ராபர்ட், துணை தலைவர்கள் எட்வர்ட் நாகராஜன்.
தமிழன்னை மாத இதழ் நிறுவனர் ரவி, திருவேற்காடு நகர செயலாளர் பாஸ்கரன், தமிழன்னை கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வ கண்ணன், மகாலட்சுமி புனிதா, மீனா, பம்மல் நகர செயலாளர் கருணாநிதி, கணேசன், ரஜினி மக்கள் மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம், பெருமாள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.