பிறந்து 40 நாட்களே ஆன ஆண்குழந்தை வாளி தண்ணீரில் அமுக்கி கொலை

அரக்கோணத்தில் பிறந்து 40 நாட்களே ஆன ஆண்குழந்தை வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்டது. இதுகுறித்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-05 14:19 GMT

அரக்கோணம்

அரக்கோணத்தில் பிறந்து 40 நாட்களே ஆன ஆண்குழந்தை வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்டது. இதுகுறித்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் குழந்தை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவனூர் ரோடு தோல் ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது 22). இவர் சென்னை திருநின்றவூரில் உள்ள பூக்கடை ஒன்றில் மாலை கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சா நந்தினி (18). இவர் அரக்கோணம் அடுத்த தேவதானம் பகுதியை சேர்ந்தவர். வெவ்வேறு பிரிவை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அம்சா நந்தினிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவு குழந்தை யுவனுக்கு அம்சா நந்தினி பால் கொடுத்து விட்டு, குழந்தை மற்றும் மாமியார் கீதாவுடன் தரையில் படுத்து தூங்கியுள்ளார். அருகில் இருந்த கட்டிலில் மனோ தூங்கியதாக தெரிகிறது.

பக்கெட் தண்ணீரில் அமுக்கி கொலை

நள்ளிரவு ஒரு மணியளவில் அம்சா நந்தினி மீண்டும் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார். தொடர்ந்து 2 மணியளவில் எழுந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவர் மனோ மற்றும் மாமியார் கீதா ஆகியோரை எழுப்பி விசாரித்துள்ளார். தொடர்ந்து பல இடங்களில் தேடினர்.

அப்போது வீட்டின் வெளியே உள்ள கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை யுவன் மூழ்கி தலைகீழாக இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குடும்பத்தினரிடம் விசாரணை

இது குறித்து அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் மனோ புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் முத்துஈஸ்வரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 மாத குழந்சை நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியில் செல்ல வாய்ப்பு இல்லை. அதனால் யாரோ குழந்தையை பக்கெட் தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளனர். குழந்தையை கொலை செய்த நபர்கள் யார் என்பது தெரியவில்லை. இது குறித்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்