பஸ் நிலையங்களில் தமிழில் பெயர் எழுதக்கோரி உண்ணாவிரதம் இருந்த 4 பேர் கைது

பஸ் நிலையங்களில் தமிழில் பெயர் எழுதக்கோரி நெல்லையில் உண்ணாவிரதம் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-24 19:42 GMT

நெல்லை மாநகராட்சி புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், வ.உ.சி. விளையாட்டு திடல் பெயர் பலகைகளில் தமிழ் ஆட்சிமொழி சட்ட அரசாணைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி தமிழில் பெயர் எழுதக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று நடந்தது. தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அப்புகுட்டி மற்றும் சேரன்துரை, ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்