சாராயம் கடத்திய 4 பேர் கைது

காரைக்காலில் இருந்து சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-03-19 18:45 GMT

சிக்கல்:

காரைக்காலில் இருந்து சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். இதை ெதாடர்ந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காரைக்காலில் இருந்து நாகை பகுதிக்கு காரில் சாராயம் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காரில் சாராயம் கடத்தல்

அதன் பேரில் கீழ்வேளூர் அருகே பெருங்கடம்பனூர் - சிக்கல் சாலையில் உள்ள குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 96 மதுபாட்டில்கள், 230 லிட்டர் புதுச்சேரி சாராயம் இருந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த தென்னரசன் (வயது 57), வெளிப்பாளையம் கொட்டுப்பாளைய தெரு காளியப்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த முகமது காசிம் மகன் யாசர் அராபாத் (35), காரைக்கால், தருமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் (47), காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த கருணாகரன் (43) ஆகிய 4 பேர் என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து காரில் சாராயம் கடத்தி வந்ததும், காருக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்றது தெரிய வந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

ேமலும் அவர்களிடம் இருந்து 96 மதுபாட்டில்கள், 230 லிட்டர் சாராயம் ஆகியவற்றையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்