மது விற்ற 4 பேர் கைது
நெல்லை மாநகர பகுதியில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
நெல்லை மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சட்ட விரோதமாக மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்கள், ரூ.9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.