வீட்டில் சாராயம் பதுக்கிய 4 பேர் கைது

தானிப்பாடி அருகே வீட்டில் சாராயம் பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-27 16:55 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், மணிமாறன் ஆகியோர் தலைமையில் போலீசார் சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது புதூர்செக்கடி சரவணன் (வயது 32), நாராயண குப்பம் குப்பன் (34), புளியம்பட்டி ராதாகிருஷ்ணன் (27), ஆத்திப்பாடி ராகுல் (27) ஆகியோரது வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்