கார் மீது லாரி மோதி தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்

கார் மீது லாரி மோதி தம்பதி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-29 17:13 GMT

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் செல்லப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 39). இவர் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா (33). இந்த தம்பதியின் மகள்கள் ஆர்த்தி (10), கீர்த்தி (2). இவர்கள் 4 பேரும் ஒரு காரில் சென்னைக்கு ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். தண்ணீர் பந்தல் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது கரூரில் இருந்து ஈரோடு நோக்கி திருவாரூர் மாவட்டம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் ஒட்டி வந்த லாரி கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் லாரி டிரைவர் ரமேஷ் குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்