வீராணம் அருகே மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 4 பேர் கைது

வீராணம் அருகே மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-22 20:46 GMT

சேலம்

வீராணம் அருகே உள்ள குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் பட்டறை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது கடைக்கு சரக்கு ஆட்டோவில் ஒரு கும்பல் வந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடி சரக்கு ஆட்டோவில் ஏற்றியது. அப்போது நாய் குரைத்ததால் ஷட்டரை பூட்டிவிட்டு பட்டறைக்குள் இருந்து வேலை பார்த்து கொண்டிருந்த விக்னேஷ்வரன் வெளியே வந்தார். அவரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

இதில் ஒருவரை அவர் மடக்கி பிடித்தார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சிக்கியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை திருட முயன்றது ஏற்காடு பகுதியை சேர்ந்த கருணா (வயது 28), சுபாஷ் (20), விக்னேஷ் (26), மோகன்ராஜ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் கருணா, சுபாஷ் ஆகியோர் குப்பனூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையின் உரிமையாளர் ரமேஷ் என்பவரிடம் செல்போன் திருடியதும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்