மேலும் 4 பேர் கைது
ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை:-
தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி யாரப்நகர் மசூதி தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 20-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அஞ்செட்டி மசூதி தெருவில் வசித்து வரும் முரளியின் தம்பி தேவராஜ் (35) நிலப்பிரச்சினை தொடர்பாக தன்னுடைய நண்பர் அசோக் என்பவருடன் சேர்ந்து முரளியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் தேவராஜ், அசோக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக மதுபாலன் (19) மற்றும் 3 சிறுவர்கள் என 4 பேரை அஞ்சட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.