4 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை; தமிழ்நாட்டில் 493 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

Update: 2023-04-14 23:17 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு ஆஸ்பத்திரி மற்றும் பொது இடங்களுக்கு வருபவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 493 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 243 பேர், பெண்கள் 250 பேர் அடங்குவர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 3 பேருக்கும், மலேசியா, இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னையில் அதிகபட்சமாக 132 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி 41 பேரும், செங்கல்பட்டு 31 பேர், திருவள்ளூர் 26 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 301 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 876 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தென்காசி, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று தொற்று பாதிப்பு இல்லை. கடந்த 4 நாட்களாக தொற்றால் பாதிக்கப்பட்டு தலா ஒருவர் இறந்த நிலையில் நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்